நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அன்பரசன் என்ற புதுமுகம் இயக்கும் படம் பேயை காணோம். இதில் புதுமுகம் கவுசிக் நாயகனாக நடிக்க, பரபரப்பு நடிகை மீரா மிதுன் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர இயக்குனர் தருண் கோபி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
படம் பற்றி அன்பரசன் கூறியதாவது: காவல் நிலையங்களுக்கு காணவில்லை புகார் நிறைய வரும். முதன் முறையாக பேயை காணோம் என்று ஒருவர் புகார் செய்கிறார். அது ஏன், எதற்காக? என்பதே படத்தின் கதை. நகைச்சுவை கலந்த பேய் படமாக தயாராகி வருகிறது.
படத்திற்கு கவர்ச்சியும், துணிச்சலும் மிக்க நடிகை வேண்டும் என்பதால் மீரா மிதுனை தேர்வு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாக நடித்தார். ஆனால் அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அது அவரது சொந்த பிரச்சினை. ஆனால் அவர் படப்பிடிப்பு தளத்தின் உள்ளேயே சிகரெட் பிடித்தார். அதனால் இப்படி செட்டுக்குள் சிகரெட் பிடிக்காதீர்கள். வெளியே கேரவன் நிற்கிறது. அங்கே போய் சிகரெட் புகைத்து விட்டு வாருங்கள் என்று செட்டை விட்டு அனுப்பி வைத்தேன். அதன்பிறகு அவர் செட்டுக்குள் புகைபிடிப்பதில்லை. என்றார்.