சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
விளம்பரம் என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படம் மூலம் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் ஹீரோ ஆகியிருக்கிறார். மறைந்த நடிகர் ஜெமினி கணேசன், சாவித்திரியின் மகள் வயிற்று பேரன் அபிநய். இவர் விளம்பரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் அவருடன் ஐரா, அட்டகத்தி ஐஸ்வர்யா, தம்பி ராமைய்யா, சுனில் ஷெட்டி, சோனா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
அபிநய், டேபிள் டென்னிஸ் வீரராக இருந்தவர். இவரை, யங் இண்டியா என்ற தெலுங்கு படத்தில் டைரக்டர் தாசரி நாராயணராவ் அறிமுகம் செய்தார். விளம்பரம் படத்தின் மூலம் அபிநய் கதாநாயகன் ஆகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் டைரக்டர் சூரியநிதி. ஜெம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் முழுவதும் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், புத்திர ஜெயா ஆகிய இடங்களில் வளர்ந்து வருகிறது.