மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகுவது அதிகரித்து வருகிறது. நடிகை சில்க் ஸ்மிதா பயோபிக் டர்ட்டி பிக்சர் எனும் பெயரில் பாலிவுட்டில் படமாகி பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோபிக்காக 'நடிகையர் திலகம்' படம் உருவானது. இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். மிகப் பெரியளவில் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் தேசியளவில் விருதுகளையும் பெற்றது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமாக 'தலைவி' படம் தயாராகிவருகிறது.
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் உருவாகி வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், மேரிகோம், மில்கா சிங் உள்ளிட்டவர்களின் விளையாட்டு வீரர்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாகி வெற்றிப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் உங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கினால், அதில் எந்த ஹீரோ நடிக்க வேண்டும் என விரும்புவீர்கள் என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, ‛‛என் பேவரைட் ஹீரோ எப்போதும் சூர்யா தான். என்னுடைய பயோபிக்கில் நடிக்க அவர் மட்டுமே பொருத்தமாக இருப்பார்'' என்று கூறினார்.
இதனால் சுரேஷ் ரெய்னா பயோபிக்கில் சூர்யா நடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.