ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களில் அதிக பரபரப்பான நடிகர் விஜய். அவரைப் பற்றிய செய்திகள்தான் மீடியாக்களில் அதிகம் இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது. அந்த அளவிற்கு அவரைப் பற்றியும் அவரது படங்களைப் பற்றியும் அடிக்கடி ஏதாவது 'அப்டேட்' வந்து கொண்டிருக்கிறது. 'வலிமை அப்டேட்'டுக்காக ஏங்கும் அஜித் ரசிகர்களைப் போல விஜய் ரசிகர்கள் ஏங்குவதில்லை என்பதே பெரிய ஆறுதல்தான்.
விஜய்யின் 'பீஸ்ட்' படம் பற்றிய அப்டேட் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள் விஜய்யைப் பற்றிய மற்றுமொரு பரபரப்பான செய்தி இன்று இடம் பெறத் தயாராகிவிட்டது.
பாலிவுட் நாயகனான ஷாரூக்கான் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 29 வருடங்கள் நிறைவு பெறுகிறது. அதை முன்னிட்டு தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் சாட் செய்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் 'தளபதி விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்' என்று கேட்டதற்கு 'வெரி கூல்' என பதிலளித்துள்ளார் ஷாரூக். இன்றைய டுவிட்டர் டிரென்டிங்கில் விஜய் பற்றிய விஷயம் வருவதற்கு இது ஒன்று போதாதா ?.