புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
சமூக வலைத்தளங்களில் புதிது புதிதாக எதையாவது கண்டுபிடித்து அதில் பயனாளர்களை வசீகரிக்க அந்நிறுவனங்கள் முயற்சித்து செய்து வருகின்றன. பேஸ்புக்கில் கடந்த வருடம் 'ரூம்' என்ற ஒன்றைப் புதிதாக ஆரம்பித்தார்கள். ஆனால், அது அவ்வளவாக பிரபலமாகவில்லை. அதே கான்செப்ட்டில் டுவிட்டரில் 'ஸ்பேஸ்' என்பதை ஆரம்பித்து பிரபலமாக்க முயன்று வருகிறார்கள்.
ஏற்கெனவே, டுவிட்டரில் டிரெண்டிங் ஹேஷ்டேக், அதிகப் பதிவுகள், ரிடுவீட் என சினிமா ரசிகர்கள் பல சமயங்களில் போட்டி போட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த 'ஸ்பேஸ்' சாதனை மூலமும் போட்டியும், சண்டைகளும் ஆரம்பமாகும் போலத் தெரிகிறது.
நேற்று 'மாநாடு' படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டிற்காக ஒரு ஸ்பேஸ் உரையாடலும், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மற்றொரு ஸ்பேஸ் உரையாடலும் டுவிட்டர் தளத்தில் நடந்தது.
இதில் 'மாநாடு' ஸ்பேஸ் உரையாடலுக்கு 12 ஆயிரத்திற்கும் குறைவான பங்கேற்பாளர்களே இருந்தனர். இது பதினைந்து நாட்களுக்கு முன்பு தனுஷ் பங்கேற்க நடந்த 'ஜகமே தந்திரம்' ஸ்பேஸ் உரையாடலில் பங்கேற்ற 18 ஆயிரம் பங்கேற்பாளர்களை விடக் குறைவாகவே அமைந்தது. அதே சமயம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடந்த ஸ்பேஸ் உரையாடலில் 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இது தமிழ் சினிமா பற்றிய ஸ்பேஸ் உரையாடலில் புதிய சாதனை. அதேசமயம் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவு.
ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ள, இன்னும் புதிது புதிதாக எத்தனை கண்டுபிடிக்கப் போகிறார்களோ ?.