மங்காத்தா, ஜில்லா படங்களில் நடித்த பிக்பாஸ் 2 பிரபலம் மஹத் ராகவேந்திரா. மாடல் அழகி பிராச்சி மிஷ்ராவை காதலித்து திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சமயம் ‛‛பிராச்சி, நானும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். அப்பாவாக ஆகியிருப்பது உற்சாகமாக உள்ளது” என டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார் மஹத். இந்நிலையில் தற்போது குழந்தைக்கு அதியமான் ராகவேந்திரா என பெயர் வைத்திருப்பதாக குறிப்பிட்டு குழந்தை, மனைவி உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார் மஹத்.