பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக, எதிரணி பவுலர்களை கதிகலங்க வைத்தவர் கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த்துக்கு அதன்பின்னர் பின்னடைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சினிமா பக்கம் தனது கவனத்தைத் திருப்பியவர், டீம் 5 என்கிற மலையாள படத்தில் ஹீரோவாக நடித்தார் மேலும் ஒன்றிரண்டு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர், தற்போது இந்தியில் 'பட்டா' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் இவருக்கு சிபிஐ அதிகாரி வேடம். ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார் இந்த படத்தில் ஸ்ரீசாந்த் நடிப்பது குறித்து இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “நான் உருவாக்கிய சிபிஐ ஆபீசர் கதாபாத்திரத்திற்கு, ஸ்ரீசாந்த் மிகப்பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. அவரிடம் இந்த கதை பற்றி கூறியபோது ஒரு காட்சியை என்னிடம் நடித்துக் காட்டினார். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. இந்த படத்தில் அவருடன் இருப்பவர்களே, அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று யூகிக்க முடியாத புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிரடியான சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் ஸ்ரீசாந்த்” என்று கூறியுள்ளார்