ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

இயக்குனர் வசந்தபாலன் மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் நெருங்கிய நண்பர். வசந்தபாலன் இயக்கிய ஜெயில் படம் இன்னும் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் அவர் தனது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் கைதி, மாஸ்டர் பட வில்லன் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஜீ.பி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
கதைப்படி இந்த படத்தின் நாயகி ஒரு பண்பலை வானொலியில் தொகுப்பாளராக இருக்கிறவர். அதோடு பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் தீவிர ரசிகர். அதனால் ஒரு காதல் காட்சியில் ஹீரோ அர்ஜூன் தாஸ், தன் காதலியை இம்பரஸ் செய்ய நா.முத்துகுமாரின் கவிதை வரிகளை பாடலாக்கி பாட வேண்டும். இது பாடலுக்கான சூழ்நிலை.
இதற்கு நா.முத்துகுமாரின் ஒரு கவிதையை அப்படியே பாடலாக்க முதலில் திட்டமிடடிருந்தார்கள். இப்போது அதையே போட்டியாக மாற்றி இருக்கிறார்கள். அதாவது நா.முத்துகுமாரின் சிறந்த கவிதை வரிகளை தேர்வு செய்து, அதில் சின்ன சின்ன மாறுதல்கள் செய்து ஒரு பாடலாக உருவாக்க வேண்டும்.
இதில் சிறப்பாக தொகுக்கப்பட்ட பாடலுக்கும், அதனை உருவாக்கியவர்களுக்கும் கவுரவமும், சிறப்பும், சன்மானமும் வழங்கப்படும் என்று வசந்தபாலன் அறிவித்துள்ளார். பாடல் வருகிற 30ந் தேதிக்குள் கிடைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.




