AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் மக்கள் அனைவரிடத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதோடு பல நடிகர்-நடிகைகள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டு போட்டுக் கொண்டுள்ளார். அதையடுத்து தனது மகனுடன் மாஸ்க் அணிந்த ஒரு செல்பியையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ‛‛நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் போட்டு வீட்டீர்களா?'' என்றும் பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.