அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

தமிழில் ரோஜாக்கூட்டம், பத்ரி உள்பட பல படங்களில் நடித்தவர் பூமிகா. சமந்தா நடித்த யுடர்ன் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹிந்தி பிக்பாஸ்-15 நிகழ்ச்சியில் பூமிகா பங்கேற்பதாக வெளியான ஒரு செய்திக்கு அவர் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து பூமிகா வெளியிட்டுள்ள செய்தியில், ஹிந்தி பிக்பாஸ் -15 நிகழ்ச்சியில் நான் பங்கேற்க போவதாக வெளியான செய்தி உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார். அந்தநிகழ்ச்சியில் நட்சத்திர போட்டியாளராக கலந்து கொள்ள என்னை அழைத்தனர். ஆனால் எனக்கு ஆர்வம் இல்லாததால் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தவிர்த்து விட்டேன்.
அதோடு இதற்கு முன்பு ஹிந்தி பிக்பாஸ் 1,2,3 சீசன்களில் கலந்து கொள்ள பலமுறை எனக்கு அழைப்பு வந்தபோதும் நான் தவிர்த்து விட்டேன். காரணம், நான் ஒரு பொது ஆளுமை. திரைக்கு பின்னால் எனது தனிப்பட்ட வாழ்க்கையை கேமரா கண்கள் பதிவு செய்வதை நான் எப்போதுமே விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளார் பூமிகா.