நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
கொரோனா தொற்று இரண்டாவது அலை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகிறது. இருந்தாலும் சில பிரபலங்களின் மறைவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எதிர்பாராத சில மரணங்களால் பலரும் துயரம் அடைகிறார்கள்.
தனது தத்ரூபமான ஓவியங்களால் பலரது பாராட்டையும் பெற்றவர் பிரபல ஓவியர் இளையராஜா. கிராமத்து சூழலில் அவர் வரைந்த ஓவியங்களைக் கண்டு வியக்காதவர்கள ஒரு சிலரே. அவர் கொரானோ தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இளையராஜா மறைவுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார். “பேரன்பு மிக்க அண்ணன் ஓவியர் இளையராஜா அவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பையும், அடக்க முடியாத துயரத்தையும் தருகிறது. இந்த நோயின் கொடூரத்தை வெல்ல முடியாத சூழலை கண்டு பெரும் மன உளைச்சல் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்,” எனப் பதிவிட்டுள்ளார்.
சென்னை ஓவியக் கல்லூரியில் பட்டம் பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.