பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் |
2013ஆம் ஆண்டு வெளியான மலையாள படம் த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மோகன்லால், மீனா நடித்த இந்தப் படம் மலையாள சினிமா சரித்திரத்தை மாற்றி எழுதியது. வெள்ளி விழா கொண்டாடி, 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படத்தின் திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாடமாக அமைந்தது.
இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படம் இந்தியாவை தாண்டி கொரியன், மற்றும் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் சீன ரீமேக்கில் த்ரிஷ்யம் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது. சீன தணிக்கை சட்ட விதிகளின்படி ஒரு பிரஜை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பது போன்று காட்சிகள் இருக்க கூடாது என்பதால் போலீசிடமிருந்து தப்பிக்கும் ஹீரோ. பின்பு தானே குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறைக்கு செல்வது போன்று மாற்றப்பட்டது.
தற்போது த்ரிஷ்யம் படத்தின் 2ம் பாகமும் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய சாம் குவா இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இதிலும் மோகன்லால் தண்டனையில் இருந்து தப்புவது மாதிரியான கதை தான். இந்த கதையிலும் அவர் சிறை தண்டனை பெறுவது போன்று கதையிலும், காட்சியிலும் மாற்றங்கள் இருக்கும் என்ற தெரிகிறது.
சீன த்ரிஷ்யத்தில் முதல் பாகத்தில் ஹீரோ சிறைக்கு சென்று விடுவதால் இரண்டாம் பாகத்தில் அவர் நன்னடத்தை காரணமாக சில ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டு தன் குடும்பத்தினரோடு சேர்வது போலவும், அப்போது அவர்களுக்கு வேறு பிரச்சினைகள் ஏற்படுவது போன்றும் கதையில் மாற்றம் இருக்கலாம். என்கிறார்கள்.