ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
திபேமிலிமேன்-2 தொடரில் தமிழ்ப்போராளி ராஜி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் சமந்தா. இந்த தொடரின் டிரைலர் வந்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று இந்த தொடர் வெளியானது. இந்த தொடரில் தான் நடித்ததற்கான காரணம் குறித்தும் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் சமந்தா. அவர் கூறுகையில், தி பேமிலிமேன்-2 தொடரில் நடித்ததற்காக எனக்கு ஏராளமான பாராட்டுக்கள் வருகின்றன. எனது நடிப்பு குறித்து வெளியாகியுள்ள மதிப்புரைகளும் கருத்துக்களும் எனது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. ராஜி எப்போதும் சிறப்பானவளாக இருப்பாள் என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.
மேலும், இந்த தொடரில் நடிக்க என்னை அணுகியபோது அந்த கேரக்டரை சித்தரிக்க அதை உணரக்கூடிய திறன் வேண்டும் என உணர்ந்தேன். அதோடு, ஈழப்போரில் பெண்களின கதைகளை உள்ளடக்கிய ஆவண படங்களை எனக்கு கொடுத்தார்கள். அந்த ஆவண படங்களை நான் பார்த்தபோது ஈழத்தமிழர்கள் நீண்டகாலத்திற்கு மேற்பட்ட கஷ்டங்கள் மற்றும் சொல்ல முடியாத துயரங்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
இந்த ஆவண படங்கள் சில ஆயிரம் பார்வையாளர்களை மட்டுமே கொண்டிருந்தன என்பதை நான் கவனித்தேன். அதுதான் ஈழத்தின் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தபோதும் உலகம் எப்படி விலகிப்பார்த்தது என்பது எனக்குத் தெரிய வந்தது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனர். இந்த உள்நாட்டு சண்டை காரணமாக எண்ணற்ற மக்கள் தொலைதூர நாடுகளில் தங்கள் மனதிலும், இதயத்திலும், காயங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
ராஜியின் கதை கற்பனையாது என்றாலும், போரினால் இறந்தவர்களுக்கும், போரின் வேதனையான நினைவுகளுடன் வாழ்பவர்களுக்கும் சமர்ப்பணம். ராஜியின் சித்தரிப்பு சமநிலையானது. நுணுக்கமானது மற்றும் உணர்திறன் கொண்டது. முன்பை விட எங்களுக்கு வெறுக்கத்தக்க அடக்குமுறைக்கு பேராசைக்கு எதிராக மனிதர்களாக ஒன்றிணைவதற்கு ஒரு தெளிவான, மிகவும் அவசியமான நினைவூட்டலாக இருக்க விரும்புகிறேன். நாம் அவ்வாறு செய்யத் தவறினால் எண்ணற்றவர்களின அடையாளம், சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும்''.
இவ்வாறு சமந்தா பதிவிட்டுள்ளார்.