டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

டிஜிட்டல் உலகத்தில் ஏதாவது ஒரு விஷயத்தைத் தேட வேண்டும் என்றால் உடனே பலரும் அணுகுவது கூகுள் இணையதளத்தை. அதில் இல்லாத தகவல்களே என்று சொல்லுமளவிற்கு பலரும் தேடுவார்கள், அவற்றில் சில தவறான தகவல்களும் இருக்கின்றன என்பதுதான் உண்மை.
சமீபத்தில் கூட 'இந்தியாவின் அசிங்கமான மொழி' என்று கூகுளில் தேடும் போது 'கன்னடம்' என வருகிறது என கன்னட மக்கள் கொதித்து கண்டனம் தெரிவித்தார்கள். பின்னர் கூகுளே தாங்கள் அதைத் திருத்திவிட்டோம், தவறுக்கு வருந்துகிறோம் என கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் மன்னிப்பு கேட்டார்கள்.
இப்போது '96' பட நடிகையான வர்ஷா பொல்லம்மா கூகுளை தனது சொந்த விவகாரம் ஒன்றில் கிண்டலடித்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களுடன் சாட் செய்தார் வர்ஷா. அப்போது ஒரு ரசிகர் உங்கள் வயது 25 என கூகுள் சொல்கிறது என்றார். அதற்கு பதிலளித்த வர்ஷா எனது வயது 24 தான், நான் 1996ம் ஆண்டு பிறந்தேன், ஆக எனது வயது 24. ஆனால், எனது அம்மாவை விட கூகுளுக்கு அது நன்றாகத் தெரியும் என நினைக்கிறேன்,” எனக் கிண்டலடித்துள்ளார்.
வர்ஷாவின் வயதைச் சரி செய்யுமா கூகுள் ?, என்ற கவலை அவரது ரசிகர்களுக்கு வரலாம்.