'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் 'நேரம்', மலையாளத்தில் 'பிரேமம்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். பேஸ்புக்கில் பரபரப்பாக செயல்படும் பிரபலங்களில் ஒருவர். அவருடைய பதிவுகளுக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டால் சிலவற்றிற்கு பதில் சொல்வார். அப்படி ஒரு ரசிகர், “ஒரு படத்தை எப்படி உருவாக்க வேண்டும், என்னிடம் நல்ல கதை கைவசம் உள்ளது, புதியவர்களுக்கு ஒரு 'டிப்' சொல்லுங்களேன்,” எனக் கேட்டார்.
அதற்கு அல்போன்ஸ் புத்திரன், “ஒரு தயாரிப்பாளரைத் தேடுங்கள், அதை செயலாக்குங்கள். உங்களால் தயாரிப்பாளரைப் பிடிக்க முடியவில்லை என்றால், உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கேளுங்கள், பணத்தைப் பெற்று உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
மேலே செல்லும் போது யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதீர்கள், காரணம் அது உங்களை கீழிறக்கியும் விடும். அவர்கள் உங்களுக்காகக் காத்திருப்பார்கள். அதனால், உங்களுக்கு யார் நல்லது செய்கிறார்களா அவர்களுடன் கனிவாக இருங்கள். இந்த செயலாக்கத்தில் உங்களை ஏமாற்றுபவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் திட்டம் படம் தயாரிப்பாதாக மட்டும் இருக்க வேண்டும், உங்களை ஏமாற்றுபவர்களை தண்டிப்பதாக இருக்கக் கூடாது.
மேலிருந்தும், கீழிருந்தும், கிழக்கு, மேற்கிலிருந்தும் கவனச்சிதறல்கள் வரும். நம்பிக்கையுடன் உங்கள் மனதில் இருப்பதை உருவாக்குங்கள், உங்கள் நோக்கம் சரியானதாக இருந்தால் அந்த நோக்கமே உங்களைக் காப்பாற்றிவிடும்,” என பதிலளித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்திரனின் இந்த ஆலோசனைக்கு அவரது பாலோயர்கள் பலரும் லைக் கொடுத்துள்ளார்கள்.