மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? | நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பாரா? மேல் முறையீடு செய்வாரா விஷால்? | நடிப்பா? தயாரிப்பா?: யோசனையில் ரம்பா | மம்பட்டியான் பாடல் காப்பிரைட் : நடிகர் தியாகராஜன் பெருந்தன்மை | தருமபுரி அருகே கார் விபத்து : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ காயம், தந்தை பரிதாப பலி | தக் லைப் படத்தில் காணாமல் போன ஜாதிப்பெயர் |
தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்து கதாநாயகியாக வளர்ந்து ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து புகழ் பெற்ற கதாநாயகியாக விளங்கியவர் மீனா.
ஆனால், தெலுங்கில் தான் அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆனதால் திரையுலகில் கதாநாயகியாக தன்னுடைய 30 வருடப் பயணம் பற்றி ஒரு சிறு வீடியோவைப் பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் மீனா.
“காலம் எவ்வளவு வேகமாகப் பறக்கிறது. நாயகியாக என்னுடைய முதல் படம் நவயுகம், இன்னும் ஞாபகம் வைத்துள்ளேன். நான் செய்த பல வித்தியாசமான கதாபாத்திரங்களைப் பற்றியும், அவற்றில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததைப் பற்றியும், திரும்பிப் பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. இவை நடக்கக் காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றியுடன் இருப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழில் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' படத்திலும், தெலுங்கில் வெங்கடேஷுடன் 'த்ரிஷயம் 2' படத்திலும் நடித்து முடித்துள்ளார் மீனா.