பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த ருத்ரமாதேவி என்கிற படம் வெளியானது. குணசேகர் இயக்கிய இந்தப்படத்தில் ராணா கதாநாயகனாக நடிக்க, அல்லு அர்ஜுன் கோன கண்ணா ரெட்டி என்கிற, சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் குணசேகர், சமந்தா நடிக்கும் சகுந்தலம் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தநிலையில் அல்லு அர்ஜுன் ருத்ரமாதேவியில் நடித்த கோன கண்ணா ரெட்டி என்கிற கதாபாத்திரத்தை விரிவுபடுத்தி, அதையே ஒரு படமாக குணசேகர் இயக்க உள்ளார் என்றும் அதில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்றும், ஒரு செய்தி கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்படி ஒரு எண்ணமே தனக்கு இல்லை என கூறியுள்ளார் குணசேகர்.
அதேசமயம், ருத்ரமாதேவி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு, ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டார் என்றும் இன்னொரு தகவல் கசிந்துள்ளது படத்திற்கு பிரதாப ருத்ரா என தலைப்பு வைக்கப்பட இருக்கிறதாம். காகதீய வம்சத்தின் கடைசி மன்னனான இந்த பிரதாப ருத்ரா, ராணி ருத்ரமாதேவியின் பேரன் ஆவாராம். இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.