Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மாயாவதி பற்றி அவதூறு: ரன்தீப் ஹூடாவின் ஐநா தூதர் பதவி பறிப்பு

01 ஜூன், 2021 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Randeep-Hooda-removed-from-UN-Amabbasdor-due-comment-about-Mayawati

10 ஆண்டுகளுக்கு முன்பு மூன்சூன் வெட்டிங் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ரன்தீப் ஹூடா. அதன்பிறகு டி, ரிஸ்க், லவ் கிச்சடி, ஜன்னத் 2, காக்டெய்ல், கிக், சுல்தான், பாகி 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சல்மான்கானுடன் ராதே படத்தில் நடித்தார்.

ரன்தீப் ஹூடா பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி குறித்து காமெடியாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அப்போது கவனிக்கப்படாத அந்த விஷயம். இப்போது வீடியோவாக பரவி வருகிறது. அவர் மாயாவதியை ஜாதி ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொச்சைபடுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.

இதனால் ரன்தீப் ஹூடாவை ஐக்கிய நாடுகள் சபை தனது தூதர் பதவியில் இருந்து நீக்கி உள்ளது. அவர் ஐநா சபையில் காட்டு விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்கான தூதராக பதவி வகித்து வந்தார்.

இது குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எங்களின் தூதர் ரன்தீப் ஹூடா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் பேசிய கருத்துகள் அவதூறாகவும், எங்கள் அமைப்பின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத வண்ணம் உள்ளது. ஹூடா, இனி இந்த அமைப்பின் தூதராகச் செயல்பட மாட்டார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அக்சய் குமார் படத்திற்கு கர்ணி சேனா அமைப்பு நிபந்தனைஅக்சய் குமார் படத்திற்கு கர்ணி சேனா ... தேசிய விருதை ஷோலே இயக்குனருக்கு அர்ப்பணித்த பிரியதர்ஷன் தேசிய விருதை ஷோலே இயக்குனருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
02 ஜூன், 2021 - 18:00 Report Abuse
Mirthika Sathiamoorthi கொஞ்ச பேச்சா பேசின... இப்போ மன்னார் பரம்பரை மாவுக்கட்டு பரம்பரையா மாறிடுச்சா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in