இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் மரகத நாணயம். இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுப்பற்றி ஏ.ஆர்.கே.சரவணன் டுவிட்டரில், ‛‛ ‛மரகத நாணயம் 2 கதையை தயாரிப்பாளர் டில்லிபாபுவிடம் கூறியிருக்கிறேன். அதற்கு முன்பு சத்யஜோதி நிறுவனத்துடன் ஒரு படத்தை துவங்க உள்ளேன். இவற்றையெல்லாம் விட கொரோனாவிலிருந்து தமிழகம் மீள வேண்டும் என பதிவிட்டுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் .