Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் தமிழ் பொண்ணு தான்: யுவன் சங்கர் ராஜா மனைவி பேட்டி

28 மே, 2021 - 13:18 IST
எழுத்தின் அளவு:
I-am-tamil-girl-says-Yuvan-wife

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 2014ம் ஆண்டு முஸ்லிமாக மாறி ஷாப்ரூன் நிஸார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டார். நிஸார் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

நிஸார் யுவன் சங்கர் ராஜாவுடன் சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். மற்றபடி அவர் மீடியா வெளிச்சத்துக்கு வந்ததில்லை. ஆனால், இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார்.

இந்நிலையில், முதன் முறையாக யுவன் குறித்து பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியை யுவன் நடத்தும் யு1 என்ற யு டியூப் சேனல் வெளியிட்டுள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

‛‛என் குடும்பம். விளையாட்டாக ஏதாவது வாதிடும் போது கூட என் குடும்பத்தினர் யுவன் பக்கமே நிற்பார்கள். அவர்கள் தங்கள் வீட்டு மகனைப் போல அவரிடம் அவ்வளவு இயல்பாக இருப்பார்கள். என் குடும்பம் அவரது குடும்பம் போல இப்போது மாறிவிட்டது.

யுவனின் மனைவியாக இருப்பதால் எனக்கு நன்றாகப் பாடத் தெரியும், இசையைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. உண்மை இதற்கு நேரதிரானது. ஆனாலும் அவர் உருவாக்கும் இசையை மற்றவர்கள் கேட்கும் முன்னால் நான் முதலில் கேட்டு அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது.

இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் நாம் பார்க்கும் ஜன்னல், நாம் தான். இந்தப் பழமொழி எனக்குப் பிடிக்கும். நமது ஜன்னல் அழுக்காக இருந்தால் நாம் பார்க்கும் உலகமும் அழுக்காகத் தான் இருக்கும் என்பது தான் என் எண்ணம்.

தோற்றத்தை மட்டும் வைத்து ஒரு விஷயத்தை தீர்மானிப்பது எனக்கு உடன்பாடில்லாத விஷயம். என் பெயர் ஸப்ரூன் நிஸார் என்பதை மனதில் கொண்டு நான் உருது, அல்லது இந்தி போன்ற மொழிகளை பேசுவேன் என்று மக்கள் நினைப்பார்கள். உண்மை என்னவென்றால் நான் ஒரு தமிழச்சி. தமிழ் என் தாய் மொழி.

யுவனை தானே நீங்க ட்ரக்ன்னு சொல்றீங்க, ஆமா வீட்லேயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன். எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன்” என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவால் திருமணத்தை ஒரு வருடம் தள்ளி வைத்த மெஹ்ரின்கொரோனாவால் திருமணத்தை ஒரு வருடம் ... மிரட்டுகிறது மீ டூ புகார்: வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது? மிரட்டுகிறது மீ டூ புகார்: வைரமுத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
02 ஜூன், 2021 - 03:25 Report Abuse
Ram Ram கேரளாவை சார்ந்த மாப்பிள்ள முஸ்லிம்கள் மதம் தான் முக்கியம் என்று பாகிஸ்தான் சென்றார்கள் . ஐம்பது வருடத்தில் கேரளா மொழியை இழந்து பெயரை இழந்து உருது பேசி வாழ்கிறார்கள்
Rate this:
venkates - ngr,இந்தியா
31 மே, 2021 - 16:37 Report Abuse
venkates தமிழுக்கான உறவு அவ்வளவாக இருக்காது,, இது அம்பேத்கர்ஜி ,காந்திஜி கூறியது ,, அந்நிய மொழியில் பெயர், பண்பாடு, இன்னும் பல
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
30 மே, 2021 - 15:35 Report Abuse
 Muruga Vel சவுதியில் பள்ளிவாசலில் கூம்பு வடிவ லவுட் ஸ்பீக்கருக்கு அரசரால் தடை விதிக்கப்பட்டிருக்கு ...இந்தோனேஷியா முஸ்லிம்கள் அரபி பெயர் மீது அவ்வளவு நாட்டம் கிடையாது
Rate this:
Yesappa - Bangalore,இந்தியா
30 மே, 2021 - 08:58 Report Abuse
Yesappa தமிழச்சி ஆனா பேரூ மட்டும் அரபி .. நடத்துங்க , நீங்க என்ன சொன்னாலும் நாங்க தலை ஆட்டுவோம்
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
30 மே, 2021 - 06:15 Report Abuse
N Annamalai பொது வெளிக்கு வந்தது மகிழ்ச்சி .உங்கள் கணவரை சுதந்திரமாக இசையில் வாழ விடவேண்டும் என்பதே எங்கள் ஆசை .
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in