'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்குத் திரையுலகில் பெரும் நடிகராக விளங்கியவரும், ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வராக இருந்தவருமான மறைந்த என்.டி.ராமராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
என்.டி.ராமராவின் 98வது பிறந்தநாளை இன்று ஆந்திரா, தெலங்கானாவில் கொண்டாடி வருகிறார்கள். நடிகராக இருந்த என்டிஆர், தமிழ்நாட்டில் எம்ஜிஆர் பாணியைப் பின்பற்றி தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார். 1982ல் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 1983ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல் முறை முதல்வராகப் பதிவியேற்றார் என்டிஆர். மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த என்டிஆர் 1996ம் ஆண்டு மறைந்தார்.
“அசாமிய பாடகரும், இசைக்கலைஞருமான பூபேன் ஹசரிகாவிற்கு எப்படி மரணத்திற்குப் பின்பு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதோ அதுபோல வழங்கப்பட வேண்டும். அவருடைய நூறாவது பிறந்தநாள் வர உள்ள நிலையில் அந்த உயரிய விருது வழங்கி அவரை கவுரவிக்க வேண்டும். அவருக்கு வழங்கப்படும் விருது தெலுங்கு மக்களுக்கான கவுரவமாகவும் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.