Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'குஷி' படத்திற்கு வேறொரு கிளைமாக்ஸ் சொன்ன எஸ்.ஜே.சூர்யா

28 மே, 2021 - 11:43 IST
எழுத்தின் அளவு:
S.J.Surya-says-another-climax-to-Kushi

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பழைய சூப்பர் ஹிட் படங்களைத்தான் டிவிக்கள் மீண்டும் ஒளிபரப்பி வருகின்றன. அந்த விதத்தில் நேற்று ஒரு டிவியில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த 'குஷி' படம் ஒளிபரப்பப்பட்டது.

எத்தனை முறை ஒளிபரப்பப்பட்டாலும் ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்க்கும் ஒரு சுவாரசியமான காதல் படம் 'குஷி'. அந்தப் படத்தின் கிளைமாக்சில் தொலைபேசி (லேண்ட்லைன்) இருந்தும் தொடர்பு கொள்ள முடியாமல் விஜய், ஜோதிகா தவிப்பார்கள். ஊருக்குப் புறப்படும போது ரயில்வே ஸ்டேஷனில் கூட சந்தித்துக் கொள்ள முடியாத சந்தர்ப்பம் அமையும்.

செல்போன் அதிகம் பயன்பாட்டுக்கு வராத காலத்தில் வந்த படம் அது. நேற்று அப்படம் டிவியில் ஒளிபரப்பான போது ஒருவர் டுவிட்டரில், “செல் போன் இருந்திருந்தால் 15 நிமிஷம் முன்னாடியே குஷி படம் முடிஞ்சிருக்கும், ரயில்வே ஸ்டேஷன் சீன்லாம் வந்தே இருக்காது” என டுவீட் செய்திருந்தார்.

அதற்கு எஸ்ஜே சூர்யா, செல்போன் இருந்திருந்தால் கிளைமாக்ஸ் எப்படி இருந்திருக்கும் என டுவீட்டில் குறிப்பிட்டு பதிலளித்தார். அதில், “அப்படியெல்லாம் இல்ல, மனசு வலில ரெண்டு பேரும் போனை தொலைச்சிட்டதா காட்டுனா போச்சு. பிரண்ட்ஸுக்கு மாறி மாறி போன் பண்ணா, அவங்க, “சிவா ஸ்டேஷனை விட்டு போயிட்டான், ஜெனி ஸ்டேஷனை விட்டு போயிட்டா”னு சொல்வாங்க, அவ்ளோதான். எது கிளைமாக்சோ அதுக்கேத்தபடி சீனை பில்ட்அப் பண்ண வேண்டியதுதான்,” என்றார்.

எஸ்ஜே சூர்யாவின் இந்த பதில் விஜய் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துவிட்டது. பலரும் ''குஷி 2' எடுங்க சார், மீண்டும் விஜய் கூட படம் பண்ணுங்க,” என அவருக்கு கமெண்ட் செய்தனர்.

அஜித்திற்கு 'வாலி' என்ற திருப்புமுனை படத்தையும், விஜய்க்கு 'குஷி' என்ற திருப்புமுனை படத்தையும் கொடுத்த இயக்குனர் எஸ்ஜே சூர்யா, இப்போது நடிகராக மிகவும் பிஸியாக இருக்கிறார். விஜய்யுடன் அவர் மீண்டும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்ற முடிவு விஜய்யின் கையில்தான் உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது : பார்வதி எதிர்ப்புவைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது : ... 'மாநாடு' சிங்கிள் : தாமதப்படுத்துகிறாரா யுவன்ஷங்கர் ராஜா? 'மாநாடு' சிங்கிள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ganapathy - Bangalore,இந்தியா
29 மே, 2021 - 15:09 Report Abuse
Ganapathy சூர்யாவின் திறமைக்கு வணக்கம் . ஒரு மலையள படத்தில் மோகன் லால் கதாநாயகனான நடித்தப்டும், காதலி( கிரிஜா) தன விருப்பத்தை தெரிவிப்பர் என்று கடைசிவரை காத்து இருப்பர் . பின்னர் வீட்டை பூட்டி சாவியை தோட்டத்தில் எறிந்துவிடுவார் , வீட்டை விட்டு கிளம்பும் முன், தொலை பேசி ஒலிக்கும் , சாவியை தேடுவர் அதற்குள் மணியோசை நின்றுவிடும் ,பின்னர் லாலும் , காதலியும் எதிர் எதிர் திசையில் சிக்னலுக்கு வேண்டி கற்று இருப்பர். சிக்கினால் விழுந்தவுடன் திசை மாரி பயணிப்பர்
Rate this:
28 மே, 2021 - 14:41 Report Abuse
ரவிச்சந்திரன் முத்துவேல் நல்ல இயக்குனர், அதனால் தான் அவரால் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கதையின் கிளைமாக்ஸ் -ஐ கூட சாதாரணமாக மாத்தி யோசிக்க முடிகிறது மற்றும் சிறந்த நடிகரும் கூட
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in