எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ் | ராம்சரணின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! | வருகிற மார்ச் 24ம் தேதி நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் திருமணம்! | இது சாமி விஷயம்- நறுக் பதில் கொடுத்த யோகி பாபு! | என்னை வியக்க வைத்த தனுஷ் - சேகர் கம்முலா! | 'நிறம் மாறும் உலகில்' படத்தில் 4 கதைகள் | பிளாஷ்பேக் : ஒரே ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து உருவான இரண்டு தமிழ் படங்கள் | பிளாஷ்பேக் : சொக்கலிங்கம் 'பாகவதர்' ஆனது இப்படித்தான் | சாய் பல்லவிக்கு கிடைத்த ஆசீர்வாதம்! | இந்தியா பசுமையை இழந்து விட்டதால் நியூசிலாந்தில் 'கண்ணப்பா'வை படமாக்கினோம் : விஷ்ணு மஞ்சு |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் மாபியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிம்பு ஜோடியாக பத்து தல, உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் விஷாலின் 32வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று பிரியா பவானி சங்கர் சமூக வலைத்தளம் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் விஷாலுடன் நடிப்பது பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:
தற்போதைய சூழ்நிலையில் நானும் விஷால், இயக்குனர் கார்த்திக் ஆகியோரும் எங்களையும் எங்களின் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். இதுபோல் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாக்க வேண்டும். நிலைமை சரியான பிறகு படக்குழு இதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிடும். பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியிருந்தார்.
விஷாலுடன் நடிக்கவில்லை என்று மறுக்காமல் இதுதொடர்பான தகவல்களை தயாரிப்பாளர் என்ற முறையில் விஷால் தான் வெளியிட வேண்டும் என்கிற தார்மீக அடிப்படையில் பிரியா பவானி சங்கர் பதில் அளித்திருந்தார். இதன் மூலம் விஷால் ஜோடியாக அவர் நடிப்பது உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் நம்பினார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து மீண்டும் தனது டுவிட்டரில் பிரியா பவானி சங்கர் கூறியிருப்பதாவது: எதையும் உறுதி செய்ய நான் சரியான ஆள் கிடையாது மக்களே. இது பற்றி எதையும் விவாதிக்கும் நிலையில் அவர்கள் இல்லை, என்று ஒரு நல்ல தோழியாக உங்களிடம் சொன்னேன், அவ்வளவே. சகஜ நிலை திரும்பி எல்லாம் நல்லபடியாக நடக்கும்போது அந்தப் படத்தை ஒரு ரசிகையாகவோ அல்லது அந்தப் படத்தில் நடிக்கும் நடிகையாகவும் அதை ரசிப்பேன். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதுவும் நிச்சயமில்லை. தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். என்று கூறியிருக்கிறார்.
இந்த பதிவிலும் அவர் விஷாலுடன் நடிப்பதை மறுக்கவில்லை. அதை அவர்கள் சொல்ல வேண்டும் என்பதையே மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்.