குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜுனியர் என்டிஆர், தற்போது 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு கொரட்டலா சிவா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் தேவிஸ்ரீபிரசாத், தமன் ஆகிய இருவரைத்தான் தற்போது அதிகம் ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். கொரட்டலா சிவா கூட தேவிஸ்ரீ பிரசாத்துடன்தான் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார். ஆனால், அவர் தற்போது இயக்கி வரும் 'ஆச்சார்யா' படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார்.
அனிருத் தெலுங்கில் இதுவரை இசையமைத்த 'அஞ்ஞாதவாசி, ஜெர்ஸி, கேங் லீடர்' ஆகிய படங்கள் மூலம் அவருக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் அவருடைய இசையை தெலுங்கு ரசிகர்கள் வரவேற்றுள்ளார்கள்.
ஜுனியர் என்டிஆர் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்குக் கிடைத்தால் அவருக்குத் தெலுங்கில் மீண்டும் ஒரு ஓபனிங்கை ஏற்படுத்திக் கொடுக்கும் என்கிறார்கள்.