'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, கொரோனா தொற்றின் முதல் அலை வீசும்போதே பல சமூக பணிகளை செய்தார். தற்போது இரண்டாம் அலை வீசும் நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியும் செய்யப்படுகிறது. இதனை அவர் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்த செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நாங்கள் உருவாக்கும் மருத்துவமனைக்கு போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் வந்து விட்டது. விரைவில் இந்த பணி முடிவடையும் என்று தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி தமிழில் ரஜினி ஜோடியாக காலா படத்தில் நடித்தார். தற்போது அஜித்துடன் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பெல்பாட்டம் என்ற படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்து முடித்திருக்கிறார்.