22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ள அளவிற்கு இன்று நடிகர் தனுஷ் வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய அண்ணன் இயக்குனர் செல்வராகவனும் ஒரு முக்கிய காரணம்.
2002ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி இருவரும் இணைந்த முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படம் வெளிவந்தது. அப்படத்தில் செல்வராகவன் ஒரு திரைக்கதை எழுத்தாளர் மட்டுமே. ஆனால், படத்தை இயக்கியது அவர்களின் அப்பா கஸ்தூரிராஜா. அந்தப் படத்தை செல்வராகவன் தான் இயக்கியிருப்பார் என இன்று வரை பலரும் சொல்லி வருகிறார்கள். அதனால் தான் இன்றைய தினத்தை தனுஷ், செல்வராகவன் இருவரது கூட்டணியின் 19வது ஆண்டு என அவர்களது ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் இதுவரை, “காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. அடுத்து 'நானே வருவேன்' என்ற புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
'துள்ளுவதோ இளமை' படம் வெளிவந்த போது தனுஷ் மீது எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகம் வந்தன. ஆனால், போகப் போக தன்னுடைய நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டு தேசிய விருதுகளை வாங்கும் அளவிற்கும், ஹிந்திப் படங்களில் நடிக்கும் அளவிற்கும் தன்னை உயர்த்திக் கொண்டவர் தனுஷ். தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
கமல்ஹாசனுக்குப் பிறகு விக்ரம் தான் திறமையான நடிகர் என பேசப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பேச்சு அனைத்தும் தனுஷ் மீது மட்டுமே திரும்பியிருக்கிறது.