ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

கடந்த 2018ல் மோகன்லாலை வைத்து மலையாளத்தில் ஒடியன் என்கிற படத்தை இயக்கியவர் விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன். மிகப்பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து கடைசியில் அந்தப்படத்தை மிகப்பெரிய தோல்விப்படமாக தந்து, மோகன்லால் ரசிகர்களின் கண்டனங்களுக்கு ஆளானார். அதை தொடர்ந்து சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மோகன்லாலை வைத்து மகாபாரத பீமன் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்க, பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பண மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் நேற்று. கைது செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீகுமார் மேனன். இந்த தகவல் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவல்சம் என்கிற நிதி நிறுவனத்திடம் பட தயாரிப்புக்காக ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிய ஸ்ரீகுமார், அதன்பின் அந்த நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. முறையான பதிலும் சொல்லவில்லை.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நேற்று பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீகுமார் மேனன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக அவர் விண்ணப்பித்த முன் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது..




