Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவிலிருந்து மக்களை காப்பாத்துங்க : மேலும் சில வேண்டுகோள் உடன் முதல்வர் ஸ்டாலினுக்கு சிவகுமார் வாழ்த்து

07 மே, 2021 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Sivakumar-wishes-and-request-to-CM-MK-Stalin

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. தனிபெரும்பான்மை உடன் திமுக., இன்று(மே 7) ஆட்சியில் அமர்ந்தது. முதன்முறையாக திமுக., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவகுமாரும் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு சில வேண்டுகோளும் வைத்துள்ளார். அதன் விபரம் வருமாறு...

திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். 1996-ல் திமுக 172 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதற்குப் பின் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கருணாநிதி இறந்த பிறகு 125 இடங்களில் தனிபெரும் கட்சியாக தற்போது திமுக வெற்றி பெற்றது ஸ்டாலினின் அவர்களுடைய இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று, தாத்தாவிற்கேற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார்.

முதலமைச்சர் அவர்களுக்கு முதலிலே எனது வேண்டுகோள். கொரோனா காலத்திலிருந்து நம்ம மக்களை காப்பாத்துங்க. மருத்துவமனைகளிலும் மருந்துகடைகளிலும் காலையிலிருந்து, மாலைவரைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை. படுக்கை இருந்தா ஆக்ஸிஜன் இல்லை. ஆக்ஸிஜன் இருந்தா வெண்டிலேட்டர் இல்லை. இந்த காலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க.




ஆந்திரா, கர்நாடகம், கேரளாவில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்தந்த தாய் மொழிகளைப் படித்தே ஆக வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் குழந்தைகள் தமிழ் கற்காமலே பட்டப்படிப்பு படித்துவிட்டு, வேலைக்குச் செல்லும் அவலம் இங்கே மட்டுமே இருக்கிறது. செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தவரின் வாரிசு நீங்க. இங்க, தமிழ் மொழியில பட்ட படிப்பு படிச்சவங்களுக்கு இங்க நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் தமிழ் நிச்சயமாக வாழும்.

ஏரி, குளங்களைப் பராமரித்து விவசாயம் செழிக்க உதவி செய்யுங்கள். கருணாநிதி அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி தான் பொற்காலம் என்று சொல்வது போல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை

முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைக்கட்டி முன்நிற்க, சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்.



Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
‛பிக்பாஸ்' புகழ் கேப்ரில்லாவுக்கும், ‛சுந்தரி' புகழ் கேப்ரில்லாவுக்கும் கொரோனா‛பிக்பாஸ்' புகழ் ... பாக்யராஜ் - பூர்ணிமாவுக்கு கொரோனா பாக்யராஜ் - பூர்ணிமாவுக்கு கொரோனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

meenakshisundaram - bangalore,இந்தியா
09 மே, 2021 - 06:07 Report Abuse
meenakshisundaram இவனும் இவனது குடும்பமும் தமிழக எல்லையையே தாண்டாதது போல பேசுறாரே கார்த்தியை படிக்க வச்சது அமெரிக்காவிலே தானே ?ஏன் /அவருக்கு தமிழகத்தின் ஒதுக்கீடு காரணமா கல்லூரிலே இடம் இல்லையா ?அப்போ மத்த தமிழணலாம் திண்டாடணுமா வேலை இல்லாமே ?இவரின் பார்வை மிக குறுகியதாக ஆகி விட்டது .'வானமே எல்லை 'யாதும் ஊரே யாவரும் கேளிர் -தெரியாத ராமாயண பேச்சாளர் .கடோசிலே சீதைக்கு ராமன் சித்தப்பா 'என்கிறார் ?இவரின் கோரிக்காயை முந்திய முதல்வர் -இவரது பகுதியிலிருந்து வந்தவரான இடைப்பாடியிடம் வைத்திருக்க வேண்டியது தானே ?'அனுகூல சத்துரு என்று சில மனிதர்களை கூறுவார்கள் -தமிழனுக்கு நல்லது செய்கிறோம்னு சொல்லிக்கிட்டு கேட்டை விளைவிப்பவர்கள் ?
Rate this:
sivan - seyyur,இந்தியா
08 மே, 2021 - 05:32 Report Abuse
sivan தமிழகத்தில் போன வருடமும் இந்த வருடமும் கொரோனா கட்டுக்குள்தான் இருந்தது/ இருக்கிறது. அப்படி இருக்கும்போது கொரோனாவில் இருந்து நாட்டை காப்பாறுங்கள் மக்களை காப்பாற்றுங்கள்.. என்று இந்த நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர் எதற்காக கூவுகிறார்?
Rate this:
08 மே, 2021 - 04:50 Report Abuse
Prasanna Krishnan Then Why you sent your three children to English medium school? Think about talking rubbish.
Rate this:
Manian - Chennai,ஈரான்
08 மே, 2021 - 04:21 Report Abuse
Manian சிவ குமார் இது சினமா இல்லை. அங்கே பரமசிவன் வேஷம் போடலாம். இப்போ பாதையிலே இருக்குறவனுக ராக்ஷர்கள். ராவணன் எப்படி இலங்கையி அழித்தானோ அப்படியே செய்யும் . நீறு அனுமார் இல்லையே, ராமன் கேக்க
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
08 மே, 2021 - 04:14 Report Abuse
Ram இனிமேல் சிவகுமார் சார் செல்பி எடுக்கும் போனை தட்டி விட்டு உடைத்து போனால் அரசு புதிய செல் போன் வழங்க அவந செய்யுமாறு பணிவன்புடன் அரசை வேண்டுகிறேன்
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in