எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' |
இன்றைய தேதியில் பிசியான நடிகை யார் என்று கேட்டால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். க.பெ.ரணசிங்கம் படத்திற்கு பிறகு சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தில் சமையல் அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஒரு பெண் அதிலிருந்து விடுவிட்டு விடுதலையாகி சுதந்திர காற்றில் பறக்கும் புரட்சிப் பெண்ணாக நடிக்கிறார். அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கும் புதிய படத்திலும் ஐஸ்வர்யா நடிக்கிறார். இதுவும் ஹீரோயின் சப்ஜெக்ட் படமாகும்.
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற இன்னொரு படமான அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கிறார். தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள டிரைவர் ஜமுனா என்ற படத்தில் கால் டாக்சி டிரைவராக நடிக்கிறார். தனி ஒரு பெண்ணாக போராடி தனக்கு வரும் ஒரு பெரிய பிரச்சினையையும் சமாளித்து குடும்பத்தை காப்பாற்றுகிற கேரக்டர். இதுதவிர தமிழில் பூமிகா, திட்டம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நடித்து முடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் வெளிவர வேண்டியது உள்ளது. ரிபப்ளிக், டக் ஜெகதீஷ் என்ற தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.