100 கோடி வசூல் கடந்த 'மிராய்' | கிஸ் கொடுத்தது மிஷ்கின் தான் : மேடையில் அறிவித்த கவின் | இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி | பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன் | ஆஸ்பத்திரியில் ரோபோ சங்கர் : அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது | திரிஷ்யம் படத்தின் கிளைமாக்ஸ் ஆக நான் முதலில் எழுதிய காட்சி வேறு ; ஜீத்து ஜோசப் | இயக்குனருக்கு தெரிவிக்காமலேயே ரீ ரிலீஸுக்கு தயாராகி வரும் மம்முட்டியின் 'சாம்ராஜ்யம்' | ஹேக் செய்யப்பட்ட மொபைல் போன்கள் ; உபேந்திரா-பிரியங்கா தம்பதி விடுத்த எச்சரிக்கை | பிரதமர் மோடிக்கு, ரஜினி, கமல், இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து | 'காந்தாரா சாப்டர் 1' டப்பிங்கை முடித்த ருக்மிணி வசந்த் |
தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகரான விவேக், கடந்த ஏப்., 17ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது இறுதிச்சடங்களில் திரளான ரசிகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலியும், சமூகவலைதளங்களில் இரங்கலும் தெரிவித்தனர்.
விவேக்கின் நல்ல நண்பர் நடிகர் விஜய். அவருடன் பல படங்களில் பணியாற்றி உள்ளார். தனது 65 படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றிருந்த விஜய், விவேக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. அதேசமயம் விவேக்கிற்கு விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அதேசமயம் விஜய் ஒரு இரங்கலாவது தெரிவித்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஜார்ஜியாவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய விஜய், இன்று(ஏப்., 26) காலை விவேக் வீட்டிற்கு சென்று அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனர் உள்ளிட்ட குடும்பத்தாரிட் ஆறுதல் கூறினார். மேலும் விவேக்கின் மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி ஆகியோரிடம் பேசி ஆறுதல் கூறினார். மேலும் தனது மேலாளரிடம் தமது போன் நம்பரை வாங்கி கொள்ளுங்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கேளுங்கள் என கூறிவிட்டு சென்றார்.