தமிழில் இடைவெளி இல்லை: பிரியங்கா மோகன் | அம்மா மாதிரி வருவேன்: குஷ்பு மகள் நம்பிக்கை | 'ப்ரோ கோட்' டைட்டில் வழக்கை வாபஸ் பெற்றார் ரவி மோகன் | பிளாஷ்பேக்: தஞ்சை சிறையில் தயாரான படம் | பிளாஷ்பேக்: ஓட்டல் நடத்திய முதல் நடிகர் | 'தாய் கிழவி'யைப் பார்க்க பெண்கள் வருவார்களா? | பிளாஷ்பேக்: ஆர் எம் வீரப்பனால் இயக்குநர் என்ற இலக்கை எட்டிப்பிடித்த ஏ ஜகந்நாதன் | 'கேஜிஎப் 2' டீசர் 279 மில்லியன் : 'டாக்சிக் டீசர் 100 மில்லியனாவது கடக்குமா ? | 8 வார ஓடிடி இடைவெளி; தெலுங்கு திரையுலகம் ஆலோசனை | ‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' |

நடிப்பதற்கு கையில் படம் இல்லை என்றாலும் மீடியாக்களின் கவனத்தை திருப்ப அடிக்கடி எதையாவது செய்கிறவர் நடிகர் மன்சூரலிகான். சில நேரங்களில் அது அவருக்கு ஆபத்தாக முடியும்.
அப்படித்தான் நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசியையும் விவேக்கின் உடல் நலனையும் ஒப்பிட்டும், கொரோனா இந்தியாவிலேயே இல்லை, அரசு ஏமாற்றுகிறது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அளித்த புகாரின் பேரில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல், தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல், சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல், தொற்றுநோய் தடுப்புச் சட்டம்,பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மன்சூரலிகான் கைது செய்யப்படுவார் என்றும், ஜாமீனில் வெளிவர முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் முன்ஜாமீன் கேட்டு மன்சூரலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.