அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், சிகிச்சை பலன் இன்றி இன்று(ஏப்., 17) காலை இறந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாலை 5மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.
அவர் மறைந்த செய்தி அறிந்து, காலை முதலே பொதுமக்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
விவேக்கின் உடலுக்கு மயில்சாமி, ஆடுகளம் நரேன், சூர்யா, ஜோதிகா, கார்த்தி, ஆர்.பாண்டியராஜன், சதீஷ், எம்.எஸ்.பாஸ்கர், சூரி, நாசர், போண்டா மணி, ஜாக்குவார் தங்கம், யோகிபாபு, அந்தோணிசாசன், தாமு, கவுண்டமணி, வைரமுத்து, வையாபுரி, சரத்குமார், டாக்டர் சீனிவாசன், சார்லி, ஆர்த்தி, கணேஷ், பிரியா பவானி சங்கர், திரிஷா, லிங்குசாமி, கஞ்சா கருப்பு, சரண், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், லோகேஷ் கனகராஜ், அருண் விஜய், சந்தானம், கார்த்திக் சுப்பராஜ், லொள்ளு சபா சாமிநாதன், அர்ஜுன், சரஸ்வதி, குஷ்பு, காமெடி நடிகர் புகழ், பாபி சிம்ஹா, தம்பி ராமைய்யா, சிங்கம் புலி, ஹிப் ஹாப் ஆதி, ஈரோடு மகேஷ், ரோபோ சங்கர், மிர்ச்சி சிவா, ஹரிஷ் கல்யாண், ரமேஷ் கண்ணா, ஆர்.கே.செல்வமணி, சசிகுமார், சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய்சேதுபதி, இமான் அண்ணாச்சி, விஜய் ஆண்டனி, சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, பி.வாசு, உதயநிதி, ஜெய், சித்தார்த், அர்ஜுன் தாஸ், கீர்த்தி சுரேஷ், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
காமெடி நடிகர் புகழ் |
நடிகர் சித்தார்த் |
அர்ஜுன் தாஸ் |
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா |
தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். திமுக., சார்பில் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். வைகோ, பிரமேலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் சந்தானம் |
நடிகர் ரோபோ சங்கர் |
நடிகர் மிர்ச்சி சிவா |
நடிகர் விக்ரம் |
சூரி
சூரி கூறுகையில், விவேக் அண்ணனுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்க கூடாது. மிகவும் கொடூரமானது. 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். படங்கள் மூலம் சமுதாய சீர்த்தருங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அவர் காமெடியன் கிடையாது. ஹீரோ. அவரால் சிரிச்சு, சிந்திச்ச கோடிக்கணக்கான மனங்கள் மட்டுமல்ல மரங்களும் அழுகின்றன. இந்த உலகம் உள்ள வரை நீங்கள் இருப்பீர்கள். அந்த இயற்கை தான் அண்ணன் குடும்பத்திற்கு ஆறுதலாக இருக்கும் என்றார்.
இயக்குனர் தரணி |
நடிகை திரிஷா |
இயக்குனர் லோகேஷ் கனகராஜ். |
நடிகர் ஹரிஷ் கல்யாண். |
இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. காமெடியில் முக்கியமான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார். அவர் மறைந்ததை நம்மை விட லட்சக்கணக்கான மரங்கள் தான் அழுகின்றன. ஒரு நல்ல நண்பர், எனக்கு மிகப்பெரும் இழப்பு என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ஹிப் ஹாப் ஆதி. |
எம்.எஸ்.பாஸ்கர்
உடல்நிலை சரியாகிவிடும் என்று தான் நினைத்தோம். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தங்கமான மனிதர். யாருக்கும் தீங்கு இழைக்காதவர். பொதுநலத்தில் அதிக அக்கறை கொண்டவர். நாட்டை உயர்த்தணும் என்று சொல்வார். அப்படியே நடந்தும் வந்தார். பெரிய இடி என்று தான் சொல்லணும்.
நிறைய மரக்கன்றுகளை நட வேண்டும் என்று சொல்வார். அவரின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு. அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
ஜாக்குவார் தங்கம், யோகி பாபு, போண்டா மணி உள்ளிட்டோர் |
அத்தனை தமிழ் மக்களுக்கும் இழப்பு. நல்ல மனிதர். தமிழ் சினிமாவில் அவரின் நகைச்சுவை முக்கியமானது
மயில்சாமி
ஊர் ஊராக சென்று மரத்தை நடுவார். எவ்வளவு நண்பர்கள் அவருக்கு. சில தினங்களுக்கு முன்பு கூட பேசினேன். அவர் மறைந்ததை என்னால் நம்பமுடியவில்லை.
தாமு
நடிகர் என்பதையும் தாண்டி மிகப்பெரிய சமூகவலவாதி. எனக்கும் அவருக்குமான நட்பு அளப்பரியது. கலை ரசிகன் அவன். எப்படிப்பட்ட கலைஞன், திறமையானவன். எல்லாவற்றையும் தாண்டி ஐயா கலாமின் மனதில் இடம் பிடித்தவன். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பை அவனிடம் கொடுத்தார் கலாம் ஐயா. அவன் விட்டு சென்ற பணியை தொடரணும். விவேக் எல்லோரின் மனதிலும் நிச்சயம் இருப்பான் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர். |
வையாபுரி
என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நானும், அவரும் 40 படங்கள் வரை நடித்துள்ளோம். அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் படங்கள் வாயிலாக நிறைய சமூககருத்துக்களை சொன்னவர். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
டாக்டர் சீனிவாசன்
விவேக் அவர்கள் இறந்தது வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. தமிழ் சினிமாவின் ஒரு நட்சத்திர நடிகர் மறைந்துவிட்டார். அவரின் மறைவை ஜீரணிக்க முடியவில்லை. அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
சரத்குமார்
தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு. சிறந்த மனிதர், நல்ல நண்பர். அப்துல் கலாமின் சீடன் என்று சொல்லலாம். மக்களுக்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். பொதுநல சேவையில் தன்னை முன்னிலைப்படுத்தி எந்த விஷயமாக செய்யக்கூடிய மனிதர். உடல்நிலை சரியில்லை என்று சொன்னபோதே மிகப்பெரிய அதிர்ச்சி. அவரின் இழப்பை தாங்க முடியவில்லை. கலைக்குடும்பத்தின் சார்பாக என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
நடிகர் உதயநிதி. |
சார்லி
விவேக் உடலுக்கு நடிகர் சார்லி அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‛‛நண்பர் விவேக்கின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதிலும், பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா அவருக்கு பிடித்த லைன். இன்னைக்கு எங்களை எல்லாம் பதறவைச்சுட்டு போயிட்டாரு. இந்த மண் உள்ள வரை உனது புகழ் இருக்கும் என்றார்.
ஆர்த்தி கணேஷ்
35 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டுள்ளார். இயற்கை மீது அவர் எவ்வளவு அன்பு கொண்டுள்ளார் என்பதை இது காட்டுகிறது. அவர் பெயரை சொல்லி கண்டிப்பாக அனைவரும் ஒரு மரம் நட வேண்டும். ஒரு கோடி மரம் நட வேண்டும் என்பது அவரின் கனவு. அதை நாம் நிறைவேற்ற வேண்டும். இந்த மரங்கள், காற்று உள்ள வரை அவரது பெயர் பேசப்படும். அவருக்கு என் இதய அஞ்சலி.
நடிகர் ஜெய். |
கஞ்சா கருப்பு
அப்துல் கலாமின் அடுத்த வாரிசாக இருந்தவர் அண்ணன் விவேக். அவர் இறக்கவில்லை இன்னும் நம்மோடு தான் இருக்கிறார்.
சரண்
சிரிப்பு எனும் ஆக்ஸிஜன் சப்ளையை நமக்கு கொடுத்திருந்தார் விவேக். இப்போது அது இல்லை. ஆனாலும் அவர் நட்டு வைத்த மரங்கள் நமக்கான ஆக்ஸிஜனை தரும்.
லிங்குசாமி
ஒரு படம் தான் அவருடன் வேலை பார்த்தேன். ஆனால் அவருடன் தொடர்ந்து நட்பு இருந்தது. அவர் மகன் இறந்ததே பெரிய துயரம். அதிலிருந்து மீண்டு வர அவருக்கு வெகு நாட்கள் ஆனது. படத்தில் நடித்ததற்கும், வெளியில் இருந்ததற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. அவர் மகனை பார்த்த அதே இடத்தில் அவரை இப்படி பார்த்தது சங்கடமாக உள்ளது. அவரின் மறைவு மிகப்பெரிய இழப்பு. இன்றைக்கு உள்ள காலக்கட்டத்தில் நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கை உடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா |
நடிகர் விஜய் ஆண்டனி |
அருண் விஜய் |
அருண் விஜய்
சினிமாவிலும் சரி, சமூகவிழிப்புணர்வில் அவர் செய்த பணி அவருக்கு நிகர் யாருமில்லை. நடிகராக மட்டுமல்ல குடும்ப நபராக, நல்ல நண்பர் அவரை நன்றாக தெரியும். அவரின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஆழ்த்தி உள்ளது. மிகவும் எளிமையான மனிதர். அவரை ரொம்ப மிஸ் செய்கிறோம். என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள். மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் ஒரு மரக்கன்றை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
இயக்குனர் ஷங்கர் |
இயக்குனர் ஷங்கர்
சிரித்த முகத்தோடு இருப்பவர். அவர் மறைந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனது பாய்ஸ் படத்தில் தான் முதன்முதலில் அவர் நடித்தார். அதன்பின் சிவாஜி, அந்நியன் படங்களில் நடித்தார். எனக்கு மட்டுமல்ல சினிமாவிற்கும், தமிழ்நாட்டிற்கும், இயற்கைக்கும் மிகப்பெரிய இழப்பு. ஜென்டில்மேன் படத்தில் மனிதனாக பிறந்தால் ஒரு மரத்தையாவது நடவேண்டும் நாலு பேருக்கு நிழலை தரும் என்ற வசனம் வரும். அதை நிஜ வாழ்வில் செய்து காட்டியவர். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
சாமிநாதன்
எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் விவேக். சினிமாவில் சக நடிகரும் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணும் நல்ல மனிதர். மிகப்பெரிய கலைஞர். அவரைப்போன்று இனி ஒருவரை பார்க்க முடியாது. அவரின் ஒரு கோடி மரக்கன்று நடும் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும். அது தான் நாம் அவருக்கும் செய்யும் நன்றி என்றார்.
அர்ஜுன்
சினிமா உலகத்திற்கு, விவேக் குடும்பத்திற்கு நடந்த மிகப்பெரிய அநியாயம். அவரின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை. நல்ல திறமையான ஒழுக்கமான, அற்புதமான நடிகர். எப்பவும் சிரித்த முகத்துடன் இருப்பவர். வாழ்க்கையில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது என்பதற்கு இவரின் இறப்பும் ஒரு உதாரணம். அப்துல் கலாமின் சிஷ்யர் விவேக். அவரின் கொள்கைகளை பின்பற்றி, நிறைய மரக்கன்றுகளை நட்ட ஒரு நடிகர். அவரை அந்த கோலத்தில் பார்த்தது மிகவும் கஷ்டமாக உள்ளது. அவருடன் நிறைய நல்ல நினைவுகள் உள்ளன. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரை நிறைய பேர் மிஸ் செய்கிறார்கள், அதில் நானும் ஒருவன் என்றார்.
ரமேஷ் கண்ணா
தமிழ் கலைஞர்களுக்கே அவர் சின்ன கலைவாணர் தான். அவருடன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு உள்ளது. அவருடன் நிறைய தொடர்பு உள்ளது. அதை எப்படி சொல்வது, வார்த்தைகள் இல்லை. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என விரும்புபவர். அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. உலகம் அறிந்த அறிவாளி. திரையுலகம் இழந்ததை விட அவரை நான் இழந்துவிட்டேன் என்று தான் சொல்வேன்.
கீர்த்தி சுரேஷ். |
நடிகர் விஜய் சேதுபதி |
விஜய்சேதுபதி
விவேக் மருத்துவமனையில் இருந்து மீண்டு வருவார் என நம்பினேன். ஆனால் அவர் இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறது என்றார்.