பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'கர்ணன்'.
கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால் இப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்ற பயம் திரையுலகினரிடத்தில் இருந்தது. ஆனால், படத்திற்குக் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களால் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்தபடி வந்ததாக தியேட்டர்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாநரங்களிலும், நகரங்களிலும், மற்ற ஊர்களிலும் கடந்த இரண்டு நாளாக விடுமுறை என்பதால் மக்கள் படத்தைப் பார்க்க வந்துள்ளார்கள். 50 சதவீத இருக்கைகள்தான் என்றாலும் அவை அனைத்துமே பல காட்சிகளுக்கு நிரம்பிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று நாள் வசூலாக 20 முதல் 25 கோடி வரை வசூலித்திருக்கும் என்று வியாபார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் லாபத்தை நோக்கித் தாராளமாகப் பயணிக்கும் என்கிறார்கள்.
அதேசமயம் 'கர்ணன்' படம் சாதிய ரீதியாக சில விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட சாரார் இந்தப் படத்தை முடிந்த அளவிற்கு நெகட்டிவ்வாக விமர்சித்து சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பதாக படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவிப்பதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.




