சமீபகாலமாக மாலத்தீவு என்பது நடிகைகளின் வேடந்தாங்கலாக மாறி வருகிறது. சினிமா-சின்னத்திரை நடிகைகள் பலரும் வெக்கேஷனுக்காக அவ்வப்போது மாலத்தீவு சென்று அங்குள்ள கடலில் ஆனந்த குளியல் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதோடு காஜல் அகர்வால் உள்பட சிலர் திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்காகவும் மாலத்தீவுக்கு சென்று வந்தனர்.
அப்படி செல்லும் நடிகைகள் அங்கிருந்தபடியே தங்களது நீச்சல் உடை போட்டோ, டியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாலிவுட் நடிகை ஷ்ரத்தாக கபூரும் மாலத்தீவில் முகாமிட்டுள்ளார். அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த ஷ்ரத்தா கபூர், பிரபாசுடன் சாஹோ படத்தில் நாயகியாக நடித்தவர்.