நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா |
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி இந்தி முழுக்க பிரபலமான தொடர் மகாபாரதம். இந்த தொடரில் இந்திரன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகர் சதீஷ் கவுல். அதன் பிறகு விக்ரம் அவுர் பேட்டால் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். 'பியார் தோ ஹோனா ஹை தா' மற்றும் 'ஆன்ட்டி நம்பர் ஒன்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பஞ்சாபி மற்றும் இந்தியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
74 வயதான சதீஷ் கவுலுக்கு கடந்த 8ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், பஞ்சாப்பின் லூதியானா நகரில் உள்ள பகவான் ராம் அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.