தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. பல மாநிலங்களிலும் அதுதான் அனுமதியாக இருந்தது. பின்னர்தான் முழுமையாக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தார்கள்.
ஆனால், 100 சதவீத அனுமதி வருவதற்கு முன்பே தமிழில் வெளிவந்த 'மாஸ்டர்' படம் பெரிய வசூலைக் குவித்தது. முதல் நாள் வசூலாக 35 கோடி வசூலித்தது.
தென்னிந்திய அளவில் அதுதான் கொரோனா தளர்வுகளுக்குப் பின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை பவன் கல்யாண் நடித்து நேற்று தெலுங்கில் வெளிவந்த 'வக்கீல் சாப்' படம் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
'வக்கீல் சாப்' படத்தின் முதல் நாள் 40 கோடியைக் கடந்துள்ளதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சிலர் 50 கோடி என்றும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும், 'வக்கீல் சாப்' படத்தின் வசூலை 'மாஸ்டர்' பட வசூலுடன் ஒப்பிடக்கூடாது என்பதுதான் உண்மை. 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கை அனுமதியில் மட்டுமே வெளியான படம். 'வக்கீல் சாப்' படம் 100 சதவீத இருக்கைகளில் வெளிவந்த படம்.
'வக்கீல் சாப்' படம் 100 கோடி வசூலை எளிதில் கடந்துவிடும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அதற்கு மேலும் வசூலிக்குமா என்பது அடுத்த வாரம்தான் தெரியும்.




