தணிக்கை குழுவினர் பாராட்டிய ‛குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: “முதல்வனை” தவறவிட்ட மூன்று முன்னணி நாயகர்கள் | பெங்களூருவில் ‛எம்புரான்' படத்திற்காக விடுமுறை அளித்து சிறப்பு காட்சிக்கும் ஏற்பாடு செய்த கல்லூரி | சபாபதி, சந்திரமுகி, கல்கி 2898 ஏடி- ஞாயிறு திரைப்படங்கள் | டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் |
கடந்த 6ந் தேதி நடந்த சட்டசபை தேர்தல் ஓட்டுபதிவின் போது நடிகர் விஜய் கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓட்டுச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார். இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆனது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக் காட்டவே அவர் சைக்கிளில் வந்தார். அவர் ஓட்டி வந்த சைக்கிள் நிறத்தை வைத்து அவர் இந்த கட்சிக்குதான் ஓட்டு போட்டிருப்பார் என்று ஆளாளுக்கு தங்கள் கற்பனை குதிரைகளை தட்டிவிட்டார்கள்.
இதன் அடுத்தகட்டமாக விஜய் ஓட்டிவந்த சைக்கிள் பற்றிய விபரங்களை தோண்டி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள் அவர் ஓட்டி வந்தது டிஐ என்ற நிறுவனத்தின் தயாரிப்பாகும். அதன் விலை 22 ஆயிரத்து 800 ரூபாய் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது உடற்பயிற்சி மற்றும் பயணம் இரண்டுக்கும் சேர்த்து வடிவமைக்கப்பட்டது.
அதோடு சைக்கிள் நிறுவனம் தனது சைக்கிளை விளம்பரப்படுத்த விஜய்யுடன் இணைந்து நடத்திய பப்ளிசிட்டி திட்டம் என்று இப்போது புதிதாக ஒன்றை கிளப்பி விட்டிருக்கிறார்கள். எது உண்மை என்று விஜய்க்கு மட்டுமே தெரியும்.