Advertisement

சிறப்புச்செய்திகள்

சிறப்புக் காட்சிகள், புதுப்படம் போல் வெளியாகும் 'கில்லி' | மல்லி தொடரில் கம்பேக் கொடுக்கும் நிகிதா! | 'பிக் பாஸை' கண்காணிக்க தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு | நீங்கள் மட்டும் தான் சம்பாதிக்கணுமா... : ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை சாடிய விஷால் | 'மருதநாயகம்' படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க கமல் திட்டம் : ஆஸ்கர் விருது இயக்குனருடன் ஆலோசனை | பிளாஷ்பேக் : ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடையும் முன் சவுந்தர்யா செய்த காரியம் | பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார் | நீ நான் காதல் சீரியலில் கெஸ்ட் ரோலில் வெற்றி வசந்த் | பிக்பாஸ் ஷிவினா இது? - வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | அனிமல் படத்தின் வெற்றிக்கு வித்யாபாலன் சொல்லும் காரணம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛என்ஜாய் என்சாமி' படக்குழு மீது பத்திரிக்கையாளர்கள் அதிருப்தி

03 ஏப், 2021 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Press-people-upset-over-Enjoy-Enjaami-team

ஒரு பாடலோ, படமோ வெளிவரும் முன் வெற்றி பெற வைக்க சொல்லி பத்திரிகையாளர்களிடம் எடுத்து வருவதும், அது பெரும் வெற்றி அடைந்து விட்டால் பத்திரிகையாளர்களை கண்டு கொள்ளாததும் சமீபகாலமாக சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லேப்பில் மாஜா தளம் மூலம் வெளியிடப்பட்ட பாடல் ‛என்ஜாய் என்சாமி. பாடகி தீ மற்றும் அறிவு பாடிய இந்தப்பாடல் தான் இப்போது எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பாடலை ரசித்து வருகின்றனர். யு-டியூப்பில் மட்டும் இந்த பாடலுக்கு 98 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. திரை பிரபலங்கள் பலரும் பாடலை பாராட்டி டுவீட் செய்ததோடு, அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.

இதனிடையே இப்பாடலுக்கான வரவேற்பு பற்றி தெரிந்து கொள்ளலாம் என சம்பந்தப்பட்ட கலைஞர்களிடம் பேட்டி எடுக்கலாம் என பத்திரிக்கையாளர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களை கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ரஹ்மானின் மேனேஜர் நோயல் என்பவர் கனடாவில் உள்ளார். அவர் மூலம் தான் எல்லாவற்றையும் தொடர்பு கொள்ள முடியுமாம். அவரிடம் பேசினால் முதலில் வாட்ஸ்-அப் அல்லது மெயில் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அவருக்கு அந்த பதில் திருப்தி அளித்தால் மட்டுமே கலைஞர்களை பேட்டி எடுக்க ஏற்பாடு செய்வாராம்.

சரி அவர் தான் அப்படி இந்த பாடலை பாடி தீயை தொடர்பு கொள்ளலாம் என அவரின் தாயாரை தொடர்பு கொண்டால் அவரும் சரியான பதில் தருவது கிடையாது. அறிவை கேட்டால் எதுனாலும் நோயலிடம் கேளுங்கள் என்று கூறுகிறார். பல மீடியாக்களில் இருந்தும் பல நாட்களாக இந்த பாடல் குழுவிழனரை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லாததால் பத்திரிகையாளர்கள் கோபத்தில் உள்ளனர்.

ஏற்றி விடும் ஏணியை எட்டி உதைக்க நினைப்பது ஏனோ.?

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மண் தரையில் படுத்து உறங்கிய சிம்புமண் தரையில் படுத்து உறங்கிய சிம்பு தெலுங்குப் படம் : ஷங்கர் மீது அடுத்த வழக்கு ? தெலுங்குப் படம் : ஷங்கர் மீது அடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06 ஏப், 2021 - 06:26 Report Abuse
NicoleThomson ஓஹோ இப்போ புரியுது கனடாவில் இருந்து தான் இந்த வைரல் விஷயங்கள் தூக்கி விடப்படுகிறதோ?
Rate this:
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
03 ஏப், 2021 - 21:54 Report Abuse
rajesh enakku pirachanai irukku. can u take me interview? yetrividum yeniyaam. mayiru nu sollalama ungala. enga matter iruko anga thaney neenga poveenga. cheating media. I meant not only u.. all
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in