ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
சமீபத்தில் ராய்லட்சுமி நடித்த மிருகா படம் வெளியானது. இப்படத்தில் அவரது பாந்தமான நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இதை தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன் மீது தக்க வைக்கும் விதமாக சோஷியல் மீடியாவில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் ராய்லட்சுமி.
தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் ராய்லட்சுமிக்கு வழக்கமான உடற்பயிற்சி முறைகளும் அதற்கான சாதனங்களும் போரடித்து விட்டதாம். அதனால் விதவிதமான உடற்பயிற்சி உபகரணங்களை விரும்பி வாங்கி, அதில் தனது உடற்பயிற்சி முறையை மாற்றியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ராய்லட்சுமி, “உடற்பயிற்சி செய்வதற்கு புது வழிகளை கண்டுபிடித்துள்ளதால் எனக்கு போரடிப்பதில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது பேசாமல் சர்க்கஸில் சேர்ந்து விடலாமா என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.