இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'சுல்தான்' படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேற்று வெளியானது. தமிழில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட்டார்கள்.
தமிழ்ப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு தெலுங்குப் படம் போல இருக்கிறது என்றே சொன்னார்கள். அப்படியென்றால் தெலுங்கு ரசிகர்களுக்குப் படம் பிடிக்கும் என்று தானே அர்த்தம். அது போலவே தெலுங்கு ரசிகர்களுக்கும் படம் பிடித்துவிட்டது போலிருக்கிறது.
நேற்று தெலுங்கில் வெளியான நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு வசூலில் முந்துகிறது 'சுல்தான்'. நேற்றைய வெளியீட்டில் பெரிய படமான நாகார்ஜுனா நடித்து வெளிவந்த 'வைல்டு டாக்' படம் 1 கோடியே 20 லட்சம் வசூலித்த நிலையில், 'சுல்தான்' படம் 1 கோடியே 15 லட்சம் வசூலித்துள்ளதாம். இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இரண்டு நாட்களும் வசூல் சிறப்பாகவே இருக்கும் என்கிறார்கள்.
இதனிடையே, படத்திற்குக் கிடைத்த சில எதிர்மறை விமர்சனங்களை ஏற்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். “பெரிய ஓபனிங் கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. கார்த்திக்கு 'சுல்தான்' படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் சிறந்த ஓபனிங்க படம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மொத்த திரையுலகத்திற்கும் இப்படம் சுவாசம் அளித்துள்ளது. மொத்த ஹவுஸ்புல் காட்சிகளும் எங்கள் இதயத்தில் மகிழ்வை நிரப்பியுள்ளது.
எங்களது பல படங்கள் விமர்சகர்களின் ஆதரவைப் பெற்றவை. அவர்களுக்கு எப்போதுமே நன்றி. ஆனால், 'சுல்தான்' பற்றி சிலருக்கு வேறு கருத்துக்கள் உள்ளது, அதையும் மதிக்கிறேன். ஆனாலும், வார்த்தைகளில் கொஞ்சம் கண்ணியம் இருக்கலாம். இது சினிமா தான், ஆனால் ரசிகர்கள் தான் நமது தட்டுக்களுக்கு உணவை அளிக்கிறார்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.