சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா 'சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நாளை வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கார்த்தி, ராஷ்மிகா, தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், 'தோழா' பட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, “சுல்தான்' படத்தில் நடிக்கும் போது மிகவும் ஜாலியாக இருந்தது. ஆனாலும், தமிழில் எனது அறிமுகப்படம் என்பதால் கொஞ்சம் உற்சாகமாகவும், பயமாகவும் உள்ளது. இப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது. ஏப்ரல் 5ம் தேதி எனது பிறந்தநாள். 'சுல்தான்' வெற்றிதான் எனது பிறந்த நாள் பரிசாக அமையும்,” எனப் பேசினார்.
அந்த பிறந்தநாளை பரிசை ரசிகர்கள் தருவார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.