எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' |
ஹிந்தித் திரையுலகின் மூத்த நடிகரான திலீப்குமார் மற்றும் சாய்ரா பானுவின் உறவினரான சாயிஷா, தமிழில் 2017ல் வெளியான 'வனமகன்' என்ற படம் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்பாகவே தெலுங்கில் 'அகில்' படம் மூலமும், ஹிந்தியில் 'ஷிவாய்' படம் மூலமும் அறிமுகமானார். தமிழில் 'வனமகன்' படத்திற்குப் பின் 'கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஆர்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்ட சாயிஷா, கன்னடத்தில் புனீத் ராஜ்குமார் ஜோடியாக நடித்துள்ள 'யுவரத்னா' படம் நாளை(ஏப்., 1) வெளியாக உள்ளது. இப்படம் மூலம் கன்னடத்திலும் அறிமுகமாகிறார் சாயிஷா.
அந்த மகிழ்ச்சியை நடனமாடி வெளியிட்டுள்ளார். “நாளை வெளியாக உள்ள 'யுவரத்னா' படத்தின் வெளியீட்டிற்காக நான் இப்படித்தான் உற்சாகமாக உள்ளேன். உங்களது இதயங்களிலும் நான் நடனமாட முடியும் என நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி, தமிழ், ஆகியவற்றைத் தொடர்ந்து கன்னடத்திலும் தடம் பதிக்கிறார் சாயிஷா.