சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். கொரோனா ஊரடங்கின் போது திருமணம் செய்து கொண்ட காஜல், கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் திருமணமாகி விட்ட நடிகைகளுக்கு பெரும்பாலும் ஹீரோயின்கள் வாய்ப்பு கிடைப்பதில்லை. குணச்சித்திர வேடங்கள் அல்லது இரண்டாம் நாயகியாக நடிக்கத்தான் வாய்ப்பு அமைகிறது. தானும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை காஜல் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார் போலும்.
தற்போது கைவசம் பெரிய படங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமானவைகள் தான். எனவே திருமணத்திற்குப் பிறகும் அதே போன்ற வாய்ப்புகளை எதிர்பார்ப்பது தவறு என்பது போல, 'எனக்கு காதல், சரித்திர, நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம். வில்லியாக நடிப்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் கதை பிடித்து இருக்க வேண்டும்' எனப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் காஜல்.