ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் |

மூச்சுதிணறல் காரணமாக நடிகர் கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் முன்னணி நாயகனாக வலம் வந்த கார்த்திக், அரசியல் என பாதை மாறியதால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது, ‛தீ இவன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் மனித உரிமை காக்கும் கட்சி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக ., - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய போவதாகவும் அறிவித்தார். கட்சி தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ‛நெகட்டிவ்' என ரிசல்ட் வந்துள்ளது.