ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் டிவி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினியை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர். அதனால் தனது பாலோயர்களுக்கு அவ்வப்போது ஏதாவது போட்டோ, வீடியோ என வெளியிட்டு தொடர்பிலேயே இருந்து வருகிறார். சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்தபோது அங்கிருந்தபடியே தான் எடுத்த போட்டோக்களை வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது தான் நீச்சல் உடையில் இருக்கும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் டிடி. அதோடு, ‛‛நீச்சல் உடையில் எடுத்த இந்த ரீலை போடலாமா வேண்டாமா என்று யோசிச்சேன். மக்கள் என்ன சொல்வார்கள். என்ன நினைப்பார்கள் என நினைத்தேன். ஆனால் நான் இங்கு வர 23 ஆண்டுகள் உழைத்ததை உணர்ந்தேன். இந்த வடிவத்தை பெற மணிக்கணக்கில் உழைத்தேன். எனவே இது என் மகிழ்ச்சிக்காக எனக்கு பிடித்ததை செய்கிறேன்.(நீச்சல் வராது அதனால் நடந்தேன்)'' என்று பதிவிட்டுள்ளார்.
சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் டிடியின் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் கமெண்டுகளும், லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.