என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சாட்னா டைட்டஸ் மற்றும் பலர் நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்து தமிழ், தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'பிச்சைக்காரன்'. அப்படத்தின் வெற்றி விஜய் ஆண்டனிக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை உருவாக்கிக் கொடுத்தது.
அந்தப் படத்திற்குப் பின் விஜய் ஆண்டனி நடித்து சில பல படங்கள் வந்தாலும் அவற்றில் ஒரு படம் கூட 'பிச்சைக்காரன்' வெற்றியை நெருங்க முடியவில்லை.
தற்போது “தமிழரசன், அக்னிச் சிறகுகள், கோடியில் ஒருவன், காக்கி' ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி ஏற்கெனவே 'பிச்சைக்காரன் 2' படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்படத்தை 'பாரம்' படத்தை இயக்கிய ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என்றார்கள்.
ஆனால், இப்போது படத்தின் இயக்குனரை மாற்றிவிட்டார். 'கோடியில் ஒருவன்' படத்தை இயக்கி வரும் ஆனந்த கிருஷ்ணா 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்க உள்ளாராம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.