''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் மட்டி. புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக நடிகர்கள் யுவன், ரிதான் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநர் பிரகபல் கூறியதாவது: மோட்டார் வாகன பந்தையத்தை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளது. மண் சாலையில் நடக்கும் பந்தயத்தை மையமாக வைத்து ஹாலிவுட்டில் பல படங்கள் வந்திருந்தாலும் இந்தியாவில் தயாராகி உள்ள முதல் படம் இது. 14 கேமராக்கள் வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளோம்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபத்தை கொடுக்கும் படமாக இருக்கும். இது அட்வென்சர் மூவி. இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கே.ஜி.எப் படத்திற்கு இசை அமைக்கும் ரவி பசுருர் இசையமைக்கிறார்.
இது படமாக்கப்பட்ட இடங்கள் கேரளா, தமிழ்நாட்டின் பார்டர். காட்சிகள் உண்மை சம்பவங்களாக படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் விபத்துக்கள் நடந்திருக்கிறது. சுமார் 15 ஜீப்கள் இதில் பந்தயத்துக்காக மேம்படுத்தி புதுப்பித்து பயன்படுத்தப்பட்டது. ஹீரோ தவிர உண்மையான மட் ரேஸர்ஸ் இதில் நடித்திருக்கின்றனர்.
ஹீரோவும் இதற்காக 2 வருடம் பயிற்சி எடுத்தார். காட்சிகள் படமாக்கப்படும்போது எந்த ஒரு டூப்பும் பயன்படுத்தவில்லை .உரிய படப்பிடிப்பு தளங்களை கண்டுபிடிக்கவே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது . தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது . என்றார்.