ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்கிற படம் மூலம், தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்கிற பெயரில் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தகராறு, கொடிவீரன் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த நடிப்பை வெளிபடுத்திய இவர் தற்போது விசித்திரன் என்கிற படத்தில் ஆர்கே சுரேஷின் மனைவியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் இன்ஸ்டாகிராமில் பூர்ணாவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை குறைவான பாலோயர்களையே கொண்டிருந்தார் பூர்ணா. ஆனால் கடந்த ஜூன் மாதம் பூர்ணாவை திருமணம் செய்துகொள்வதாக நாடகமாடி, பணம் கேட்டு மிரட்டிய கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிறகு பூர்ணா பரபரப்பு வளையத்திற்குள் வந்துவிட்டார். இதனை தொடர்ந்தே அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, தற்போது ஒரு மில்லியனை தொட்டுள்ளது.