'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடியவர் ஸ்ரேயா கோஷல். ஆதித்யா என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது தான் தாய்மை அடைந்திருப்பதாக ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார். “பேபி ஸ்ரேயாதித்யா வந்து கொண்டிருக்கிறார். உங்களுடன் இந்த செய்தியைப் பகிர்வதில் மகிழ்ச்சி, உங்கள் அனைவரின் அன்பும் தேவை” என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரேயாவிற்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் இமான் அவரது வாழ்த்து செய்தியில், “மனமார்ந்த வாழ்த்துகள் ஸ்ரேயா, உங்கள் அன்பானவரை எனக்காகவும் பாடத் தயார் செய்யுங்கள். அதுவரையிலும் ஆண்டவன் எனக்கு தொடர்ந்து இசையமைக்கும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“உங்கள் வார்த்தைகள் மதிப்புமிக்கது, மிக்க நன்றி, மனதைத் தொட்டுவிட்டது, நீங்கள் சொல்வது உண்மையாகட்டும்,” என இமானின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரேயா.