ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள கேங்ஸ்டர் படம் ஜகமே தந்திரம். கடந்தாண்டே வெளியாக வேண்டிய படம் கொரோனா பிரச்சனையால் தள்ளிப்போனது. இப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என நாயகன் தனுஷ் உட்பட படக்குழு உறுதியாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் சசிகாந்த் இப்படத்தை ஓடிடியில் வெளியிடுகிறார். நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டீசர் மூலம் இதை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் இப்படம் ஓடிடியில் ரூ.55 கோடிக்கு விலை போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட்டிற்கு நிகராக விலை போய் உள்ளது. மேலும் இந்த விலை சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய்யின் மாஸ்டர் படங்களின் ஓடிடி விலையை விட அதிகம் என்கிறார்கள். ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் 6 மொழிகளில் 190 நாடுகளில் இப்படம் வெளியாக உள்ளது.